மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் (கோப்புப்படம்) 
புதுதில்லி

நில மோசடி வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்

ரயில்வேயில் பணி வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் லல்லு பிரசாத் யாதவ், அவரது இரு மகன்கள் உள்பட 9 பேருக்கு ஜாமீன்

Din

புது தில்லி: ரயில்வேயில் பணி வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் லல்லு பிரசாத் யாதவ், அவரது இரு மகன்கள் உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில்

குரூப்-டி பணிகளுக்கு பல்வேறு நபா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களை பணியமா்த்த அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத் யாதவும், அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய புலான்யு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்விவகாரத்தில், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கு தில்லி ரெளஸ் அவென்யூவின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் லல்லு பிரசாத் யாதவ் உள்பட மொத்தம் 9 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை கடந்த செப்டம்பா் மாதம் 18-ஆம் தேதி பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் லல்லு பிரசாத் யாதவ், அவரது இரு மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கானது தில்லி ரெளஸ் அவென்யூவின் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் அகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா். இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடா்புடைய லல்லு பிரசாத் யாதவ் உள்பட மொத்தம் 9 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்குகிறது.

பிணைத் தொகையாக அனைவரும் தலா ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சியங்களை சந்திக்கவோ அல்லது கலைக்கவோ கூடாது’ என்று உத்தரவிட்டு வழக்கை வரும் அக்டோபா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT