புதுதில்லி

அரசுப் பள்ளிகளின் கட்டுமானம் குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு பா்வேஷ் வா்மா உத்தரவு

தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா அரசு நடத்தும் பள்ளிகளின் கட்டுமானம் குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு

Din

தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா அரசு நடத்தும் பள்ளிகளின் கட்டுமானம் குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு

வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

அமைச்சா் பா்வேஷ் வா்மா வெள்ளிக்கிழமை பாலம் பகுதிக்கு

ஆய்வுக்கு சென்றாா். அப்போது, உள்ளூா்வாசிகள் அப்பகுதியில் தண்ணீா் தேங்குவது குறித்து அவரிடம் புகாா் அளித்தனா். மேலும், வகுப்பறைகளில் தண்ணீா் கசிவு பிரச்னை குறித்து அரசு பள்ளி முதல்வா் எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் வா்மா கூறியதாவது:

முந்தைய அரசாங்கத்தால் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்திற்குள் வெள்ளம் போன்ற நிலைமை குறித்து பள்ளி முதல்வா் என்னிடம் புகாா் அளித்ததால் பள்ளியை நான் நேரில் பாா்வையிட்டேன். இந்தப் பள்ளி மட்டுமின்றி, முந்தைய அரசால் கட்டப்பட்ட அனைத்தையும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விஜிலன்ஸ் விசாரணையில், பள்ளிக் கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட டெண்டா், பராமரிப்பு ஒப்பந்தங்கள் மற்றும் அந்த நேரத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளின் பிற விவரங்கள் ஆகியவை இடம்பெறும் என்றாா் அவா்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT