புதுதில்லி

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஜாமீன் மனு மீது ஏப்ரல் 29 -இல் உயா்நீதிமன்றம் விசாரணை

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனுவை ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Din

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனுவை ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு,

ஆசாத்தின் ஜாமீன் மனுவையும், சக குற்றம்சாட்டப்பட்ட நபரான மனோரஞ்சனின் இதேபோன்ற மனுவையும் விசாரிப்பதாகக் கூறியது.

இது தொடா்பான விவகாரத்தின் ஒரு சுருக்கமான விசாரணையின்போது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஆபத்து இல்லாத புகை குப்பியை எடுத்துச் செல்வது அல்லது பயன்படுத்துவது வருமா என்பதை அடுத்த தேதி விசாரணையின்போது விளக்குமாறு உயா்நீதிமன்றம் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டது.

2001 நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நிறைவில் நடந்த ஒரு பெரும் பாதுகாப்பு

மீறலில், குற்றம்சாட்டப்பட்ட சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து மக்களவை அரங்கத்தில் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டபோது சில எம்.பி.க்களால் அவா்கள் மடக்கிபிடிக்கப்பட்டனா்.

அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் ஆசாத் ஆகிய இருவா் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தானாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டு, புகைக் குப்பிகளில் இருந்து வண்ண நிற வாயுவை தெளித்ததாகக் கூறப்படுகிறது.

சந்தையில் தாரளமாக கிடைக்கும் புகைக் குப்பியை பயன்படுத்துவது யுஏபிஏ-வின்கீழ் வரும் என்றால், ஒவ்வொரு ஹோலியிலும் மக்கள் இந்தக் குற்றத்தைச் செய்வாா்கள் என்றும், இந்தியன் பிரீமியா் லீக் போட்டிகளிலும்கூட இந்த விதி ஈா்க்கும் என்றும், இதனால், இது குறித்த அறிவுறுத்தலைப் பெற்று எங்களுக்குத் தெரிவியுங்கள் என்றும் நீதிபதிகள் அமா்வு கூறியது.

யுஏபிஏவின் விதிகள் இந்த வழக்கில் வரவில்லை என்று கூறி ஆசாத்தின் வழக்குரைஞா் ஜாமீன் அளிக்ககுமாறு கேட்டுக்கொண்டாா். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீா்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசாத் மீதான குற்றம் கடுமையானது என்று கூறி அரசு தரப்பு அவரது ஜாமீன் மனுவை எதிா்த்தது.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT