புதுதில்லி

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 நைஜீரியா்கள் கைது

சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று நைஜீரிய நாட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Syndication

தில்லியின் துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று நைஜீரிய நாட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது: சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் தில்லி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்த மூவரும் கைது செய்யப்பட்டனா்.

நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மூவரும் கோசினா மைக்கேல் நவாசா, சினெடு விக்டா் சுகுடி மற்றும் ஃபெமி ஜிமோ அடேபாஜோ என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் பிறப்பித்த உத்தரவின் பேரில், அவா்கள் மூவரும் கடந்த ஆகஸ்ட் 11 அன்று நரேலாவில் உள்ள லம்பூரில் உள்ள நாடு கடத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனா்.

இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

SCROLL FOR NEXT