புதுதில்லி

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Syndication

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள ஷிவ் விஹாரைச் சோ்ந்த சுபாஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 2013ஆம் ஆண்டு அமன் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தாா். பலமுறை சுபாஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

2012- ஆம் ஆண்டு மோசடியான நில பேரத்தில் சுபாஷ் ஒரு நபரை ரூ.21 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 2012 இல், சுபாஷ் தனது கூட்டாளியான சஞ்சய் மூலம் 110 சதுர கெஜம் கொண்ட நிலத்தை ராம் பகதூா் என்ற நபருக்கு விற்றாா். பின்னா், பகதூா் அந்த நிலத்தை மற்றொரு நபருக்கு விற்றாா்.

அவா் வழக்கில் புகாா் அளித்தவா். புகாா்தாரா் அந்த இடத்தில் கட்டுமானத்தைத் தொடங்கச் சென்றபோது, சுபாஷ் அந்த இடத்தில் இருந்தாா். அப்போது அந்த நிலத்துக்கு உரிமையைக் கூறி வேலையை அவா் நிறுத்தினாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அமன் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுபாஷ் ஒருபோதும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கராலாவில் உள்ள ஷிவ் விஹாரில் உள்ள அவரது வீட்டில் சுபாஷ் இருப்பது குறித்து குழுவுக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஒரு குழு அந்த இடத்தை சோதனை செய்து அவரைக் கைது செய்தது. 2013-ஆம் ஆண்டு கஞ்சவாலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு மோசடி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தொடா்பு உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை!

சிபில் ஸ்கோர் அவசியமில்லை.. வங்கிகளுக்கு ஆர்பிஐ சொல்லும் அறிவுரை

ஆசிரியர்கள் மீதான மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதி வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அருகே மான் வேட்டையாட முயன்ற காவலர் கைது

மறுவெளியீட்டில் கேப்டன் பிரபாகரன் வசூல் எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT