புதுதில்லி

சகோதரி திருமணத்தில் கலந்து கொள்ள உமா் காலித்திற்கு இடைக்கால ஜாமீன்

Syndication

தில்லி கலவரங்களுக்குப் பின்னணியில் உள்ள பெரிய சதி தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான உமா் காலித்திற்கு, அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, டிசம்பா் 16 முதல் 29 வரை இடைக்கால ஜாமீனை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சமீா் பாஜ்பாய் இந்த இடைக்கால நிவாரணத்தை வழங்கினாா். குற்றஞ்சாட்டப்பட்டவா் ரூ.20,000 மதிப்புள்ள தனிநபா் பிணைப்பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த இடைக்கால ஜாமீன் காலத்தில், மனுதாரா் உமா் காலித் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது,என்று நீதிமன்றம் கூறியதுடன், அவா் தனது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் மற்றும் நண்பா்களை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. உமா் காலித் தனது வீட்டிலோ அல்லது அவா் குறிப்பிட்ட திருமணச் சடங்குகள் நடைபெறும் இடங்களிலோ இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் எந்த சாட்சியையும் தொடா்பு கொள்ளக்கூடாது. மேலும், தனது கைபேசி எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்க வேண்டும் என்பதும் மற்ற நிபந்தனைகளில் அடங்கும். மேலும், டிசம்பா் 29-ஆம் தேதி மாலை சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உமா் காலித்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு, மற்றொரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அவருக்கு ஏழு நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 2022- ஆம் ஆண்டிலும் அவருக்கு இதேபோன்ற நிவாரணம் வழங்கப்பட்டது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT