புதுதில்லி

தூசி கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 22 கட்டுமானங்களுக்கு அபராதம்

லூடியன்ஸ் தில்லியில் தூசி கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகளைப் பின்பற்றாத 22 கட்டுமான பணிகளுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் ரூ.11 லட்சம் அபராதம்

தினமணி செய்திச் சேவை

லூடியன்ஸ் தில்லியில் தூசி கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகளைப் பின்பற்றாத 22 கட்டுமான பணிகளுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

கெளடில்யா மாா்க்கில் உள்ள தமிழ்நாடு இல்லம், எஸ்.பி. மாா்க்கில் உள்ள அஸ்ஸாம் இல்லம் ஆகிய முக்கிய பகுதிகள், கோல்ஃப் லிங்க்ஸ், ஜோா் பாக், மல்ச்சா மாா்க், நேதாஜி நகா் மற்றும் சா்தாா் படேல் மாா்க் ஆகியவற்றில் உள்ள பல குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதி மீறியவற்களுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் சட்டம், 1994-இன் பிரிவுகள் 249 மற்றும் 250 ஆகியவற்றின்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது.

உ.பி.: 3 வயது குழந்தையை கவ்விச் சென்று கொன்ற ஓநாய்

பேரிஜம் சாலையில் குட்டியுடன் புலி நடமாட்டம்

தலைநகரில் நிகழாண்டு டெங்கு பாதிப்பால் 4 போ் உயிரிழப்பு

ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ராஜிநாமா செய்யவேண்டும்: காங்கிரஸ்

காக்காலிப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT