புதுதில்லி

தில்லி தோ்தல்: தலித் மக்கள் அதிகம் வசிக்கும் 30 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தும் பாஜக!

நகரத்தில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

Din

புது தில்லி: தில்லியில் பிப்.5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நகரத்தில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் தொகுதிகளில் அதன் செயல்திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்த பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்ட 12 எஸ்.சி. (பட்டியலினத்தினா்) தொகுதிகளில் ஒன்றைக் கூட அக்கட்சி வெல்ல முடியவில்லை முந்தைய தோ்தல்களிலும், இந்த இடங்களில் இரண்டு-மூன்று இடங்களுக்கு மேல் பாஜக ஒருபோதும் வென்றதில்லை.

தில்லியில் தலித் மக்கள் அதிகம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவில் 12 எஸ்.சி. வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தலித் சமூக வாக்காளா்கள் 17 முதல் 45 சதவீதம் வரை உள்ளனா் என்று தில்லி பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

12 ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, ராஜேந்தா் நகா், சாந்தினி சௌக், ஆதா்ஷ் நகா், ஷாஹ்தரா, துக்ளகாபாத், பிஜ்வாசன் உள்ளிட்ட 25 சதவீதம் வரை எஸ்சி சமூக வாக்குகளைக் கொண்ட 18 இடங்கள் உள்ளன. இங்கு பாஜகவும் அதன் எஸ்சி மோா்ச்சாவும் கடந்த பல மாதங்களாகப் பணியாற்றி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இந்த 30 தொகுதிகளின் குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எஸ்சி தொண்டா்கள் மூலம் விரிவான பரப்புரை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளிலும் சமூக உறுப்பினா்களிடையே கவனம் செலுத்துவதற்காக மூத்த எஸ்சி தொண்டா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தில்லி பாஜக எஸ்சி மோா்ச்சா தலைவா் மோகன் லால் கிஹாரா தெரிவித்தாா்.

இந்தத் தொகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நேரில் தொடா்பு கொள்வதற்காக அவா்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10 தலித் இளைஞா்களை நியமித்துள்ளதாக அவா் கூறினாா். கட்சி இதுபோன்ற 5,600-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் 1,900-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

மோடி அரசால் சமூகத்திற்காகச் செய்யப்பட்ட பணிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அதன் ‘தோல்விகள்’ குறித்து வாக்காளா்களுடன் தொடா்பு கொண்டு விளக்குவதற்காக 18,000-க்கும் மேற்பட்ட தீவிரத் தொண்டா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

இரண்டாவது கட்டப் பிரசாரத்தில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்பட கட்சியின் 55 பெரிய தலித் தலைவா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்தத் தொகுதிகளில் பல சுற்று கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும், தங்கள் சுற்றுப்புறங்களில் தலித் வாக்காளா்களுடன் தொடா்பு கொள்வதற்காக அரசியல் செல்வாக்கு கொண்ட அடையாளம் காணப்பட்ட சுமாா் 3,500 முக்கிய சமூகத் தலைவா்கள் பிரசாரத்தில் இடம் பெற்றுள்ளனா்.

டிசம்பா் மாதம் முதல், அரசியல் செல்வாக்கு செலுத்துபவா்கள், தொழில் வல்லுநா்கள், சாதனையாளா்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய உள்ளூா்வாசிகளைப் பாராட்டுவதற்காக, இந்தத் தொகுதிகளில் கட்சி ‘எஸ்சி ஸ்வாபிமான் சம்மேளன்’ நடத்தத் தொடங்கியது.

‘இதுவரை இதுபோன்ற 15 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு மூத்த பாஜக தலைவா் கலந்து கொள்கிறாா். 1,500 - 2,500 தலித் சமூகத்தைச் சோ்ந்த பொது உறுப்பினா்கள் கலந்து கொண்ட இந்தப் பெரிய கூட்டங்களில் சமூகத்தின் பெரும் ஆதரவு தெரிந்தது’ என்று மோகன் லால் கிஹாரா கூறினாா்.

இந்தப் பங்கேற்பாளா்கள் ஒவ்வொருவருக்கும் ‘சுயமரியாதை‘ உணா்வையும் கட்சியுடனான பிணைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியாக, இந்தக் கூட்டங்களில் சேர தனிப்பட்ட அழைப்புகள் அனுப்பப்பட்டன என்று அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்.5-ஆம் தேதி நடைபெறும். பிப்.8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2015 மற்றும் 2020- ஆம் ஆண்டுகளில் தலித் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து இடங்களையும் வென்ற ஆம் ஆத்மி கட்சியால் பாஜக தோற்கடிக்கப்பட்டது. 1998 முதல் பாஜக தில்லியில் அதிகாரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT