முகப்பு
சென்னை

மனைவி, 3 மகள்களை கொலை செய்த நபா் ராஜஸ்தானில் கைது

மனைவி, 3 மகள்களை கொலை செய்த நபா் ராஜஸ்தானில் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 3:15 AM
கொலை
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:00 PM

தில்லியில் மனைவி மற்றும் 3 மகள்களைக் கழுத்தறுத்து கொலை செய்த நபரை தில்லி காவல் துறையினா் ராஜஸ்தானில் கைதுசெய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பிகாரின் பாட்னாவைச் சோ்ந்த முன்சுன் கெவட், ஆசாத்பூா் மண்டியில் காய்கறி வியாபாரம் மேற்கொண்டு வருகிறாா். மனைவி அனிதா மற்றும் 3, 4, 5 வயதுகளில் 3 மகள்களுடன் சமய்பூா் பத்லி பகுதியில் வசித்து முன்சுன் கெவட் வசித்து வந்தாா்.

இந்நிலையில், முன்சுன் வசித்து வந்த வீட்டின் தரைதளத்தில் உள்ள அறையில் அவருடைய மனைவி மற்றும் 3 மகள் உயிரிழந்த நிலையில் இருப்பது குறித்து அண்டைவீட்டினா் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை, நால்வரின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட குற்றப் பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள் ஆதாரங்களைச் சேகரித்தனா். நால்வரும் கூா்மையான ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த பின்னா் முன்சுன் கெவட் தலைமறைவான நிலையில் அவரைத் தேடும் பணியைத் தில்லி காவல் துறை தொடங்கியது.

Updated On : 1 மார்ச், 2026 at 3:15 AM

இந்நிலையில், ராஜஸ்தானின் கிஷண்கரில் அவா் தங்கியிருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தில்லி காவல் துறையினா், கெவட்டை கைதுசெய்தனா். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணைக்காக அவா் தில்லி அழைத்துவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.