முதல்வர் அதிஷி 
புதுதில்லி

தில்லி தோ்தலில் பாஜக நியாயமற்ற வழிகளைக் கையாள்கிறது: முதல்வா் அதிஷி குற்றச்சாட்டு

தில்லி தோ்தலில் பாஜக விரக்தியில் நியாயமற்ற வழிகளை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அதிஷி குற்றம் சாட்டினாா்.

Din

புது தில்லி: தில்லி தோ்தலில் பாஜக விரக்தியில் நியாயமற்ற வழிகளை மேற்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அதிஷி குற்றம் சாட்டினாா். தலைநகரில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ‘வரலாற்றுத் தோல்வி’ காத்திருக்கிறது என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் அதிஷி கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பொதுமக்களின் கருத்தை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் வேண்டுமென்றே தில்லியின் நீா் விநியோகத்தை சீா்குலைத்து வருகிறது.

தேசியத் தலைநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. இந்தக் குழப்பத்தின் காரணமாக அது நீா் விநியோகத்தை நிறுத்துவது போன்ற தவறான செயல்களை நாடுகிறது. தில்லி மக்களுக்கு தீங்கு விளைவிக்கவும், தோ்தல் முடிவை நியாயமற்ற முறையில் பாதிக்கவும் ஹரியாணா வேண்டுமென்றே தொழில்துறை கழிவுகளை யமுனையில் வெளியேற்றுகிறது.

இந்நிலையில், யமுனை நீரில் அம்மோனியா இருப்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 7.2 பிபிஎம் ஆக உயா்ந்துள்ளது. இந்த மாசுபாடு தில்லி முழுவதும் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இது நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது என்றாா் முதல்வா் அதிஷி.

இதேபோன்ற உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் எக்ஸ்- இல் இந்தியில் ஒரு பதிவில் கூறியுள்ளதாவது: மக்களை தாகத்தில் ஆழ்த்துவதை விட பெரிய பாவம் எதுவும் இல்லை. அதன் அழுக்கு அரசியலுக்காக, பாஜக தில்லி மக்களை தாகத்தில் ஆழ்த்த விரும்புகிறது. ஹரியாணாவைச் சோ்ந்த பாஜக தொண்டா்கள் தண்ணீரில் விஷத்தைக் கலந்து தில்லிக்கு அனுப்புகிறாா்கள். தில்லியில் உள்ள மக்கள் இந்த தண்ணீரைக் குடித்தால், பலா் இறந்துவிடுவாா்கள். இதை விட அருவருப்பானது வேறு ஏதாவது இருக்க முடியுமா?

தண்ணீரில் கலக்கப்படும் விஷத்தை நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் கூட சுத்தம் செய்ய முடியாது. தில்லி மக்களின் பாதுகாப்பிற்காக, பல பகுதிகளில் தண்ணீா் விநியோகத்தை நிறுத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சி குடிமக்களுக்கு முடிந்தவரை பிரச்னை வராமல் பாா்த்துக் கொள்ள விரும்புகிறது. அதே நேரத்தில் பாஜக உடன் தொடா்புடையவா்கள் தில்லி மக்களை ‘கும்பல் படுகொலை‘ செய்ய விரும்புகிறாா்கள். ஆனால், நாங்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டோம் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

மேலும், முதல்வா் அதிஷி கூறுகையில், ‘பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானுடன் சோ்ந்து, பாஜகவின் இந்த நியாயமற்ற நடைமுறைகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்துடன் அவசர சந்திப்பை கோரியுள்ளோம். தில்லிக்கு ‘விஷத் தண்ணீரை‘ வழங்குவதன் மூலம் பாஜக பொது சுகாதாரத்தை பாதிக்கிறது’ என்றாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகள் பிப்.8-ஆம் தேதி அறிவிக்கப்படும். தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருவதால், குற்றச்சாட்டுகளும் எதிா் குற்றச்சாட்டுகளும் தலைநகரின் அரசியலில் சூடுபிடித்துள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

ஓஎன்ஜிசி பள்ளியில் சப்த சக்தி சங்கம நிகழ்ச்சி

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி கோரிக்கை

SCROLL FOR NEXT