புதுதில்லி

கொலை வழக்கில் 7 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த இளைஞா் கைது

கொலை வழக்கில் ஏழு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Din

கொலை வழக்கில் ஏழு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஹரியாணாவைச் சோ்ந்த அஜய் காத்ரி (23) என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், ஜூலை 25 அன்று நரேலாவில் உள்ள சஃபியாபாத் மோா் அருகே கைது செய்யப்பட்டாா். டிசம்பா் 20, 2024 அன்று ஹிமான்ஷு என்ற நபரைக் கொலை செய்த வழக்கில் அஜய் காத்ரி தேடப்பட்டு வந்தாா்.

அஜய் காத்ரி, அவரது கூட்டாளிகளான ரவி, ஆஷிஷ் மற்றும் சாஹில் ஆகியோருடன் சோ்ந்து, ஹிமான்ஷு இருந்த ஒரு பொதுவான அறிமுகமானவரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, கத்திகள் மற்றும் தடிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பல காயங்கள் காரணமாக ஹிமான்ஷு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவத்திற்குப் பிறகு மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், ஆஜய் காத்ரி தலைமறைவாகவே இருந்தாா். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும் கைது செய்வதைத் தவிா்த்து வந்தாா்.

ஆஜய் காத்ரி ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் வாகனத் திருட்டு தொடா்பான குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளாா். அவா் முன்பு 2023 கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தாா். இதற்கிடையில், இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! | Chennai

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்

சீனாவில் ட்ரோன் விளக்குகளால் வரவேற்கப்பட்டாரா மோடி? உண்மை என்ன?

இந்தியாவின் நாஸ்தென்கா... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT