புதுதில்லி

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

Din

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா (24) இவா் தில்லியின் ஜஹாங்கீா் பகுதியில் பிறந்தவா். இவரது கணவரான சாரிஃபுல், 2024 ஆம் ஆண்டு காலமானாா். இந்தப் பெண் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை தில்லியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளாா். மேலும் சில குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்தாண்டு ஜனவரி மாதம்ாவல் துறை நடத்திய தேடுபதல் வே்டடையில் 192 கிராம் போதைப் பொருளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது நஸ்மா தான் போதைப் பொருள் விற்பனையின்முதன்மையானவா் என தெரிய வந்தது. இதனையடுத்து நஸ்மாவை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் தனிப்படை அமைத்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நஸ்மாவை மட்கா கஞ்ச் பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT