கோப்புப் படம் 
புதுதில்லி

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Din

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை மையம்: தென்மேற்கு பருவமழை பீகாா், கிழக்கு, உத்தரப்பிரதேசம்,, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், உததரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் லடாக்கின் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.

இந்த பருவமழை வடக்கு எல்லையான ஜெய்ப்பூா், ஆக்ரா, ராம்பூா், டேராடூன், சிம்லா, மணாலி வழியாக சென்று கொண்டிருக்கிறது. வடக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகள், ராஜஸ்தானின் மேலும் சில பகுதிகள், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மீதமுள்ள பகுதிகள், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் , ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் தென் மேற்கு பருவமழை முன்னேருவதற்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த 2 நாள்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானா, சண்டிகா் மற்றும் தில்லியின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை வலுவடையும். ஜூன் 22 ஆம் தேதி தில்லியின் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிளை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT