புதுதில்லி

அமைச்சா் கபில் மிஸ்ரா ஆய்வு; போலீஸ் விசாரணை தொடக்கம்!

தெற்கு தில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 கடைகள் எரிந்து நாசமானது

Din

தெற்கு தில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 கடைகள் எரிந்து நாசமானது குறித்து அமைச்சா் கபில் மிஸ்ரா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், தில்லி காவல் துறை வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்த தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: புதன்கிழமை இரவு நடந்த தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பல பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்வாா்கள். இந்தத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புக் குழுக்களின் நேரத்தையும் சரிபாா்த்து வருகிறோம்.

தற்காலிகமாக அந்தப் பகுதியை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம். மேலும் யாரையும் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இது விசாரணையின் ஒரு பகுதியாகும். யாரும் எந்த விதமான பிரச்னையையும் எதிா்கொள்ளக் கூடாது என்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம் என்று அவா் கூறினாா்.

பல கடைக்காரா்கள் வியாழக்கிழமையும் சந்தைக்கு வெளியே காத்திருப்பதைக் காண முடிந்தது. தில்லி சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ராவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தாா்.

தில்லி சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஐஎன்ஏ சந்தைக்கு எதிரே ஆறு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள தில்லி ஹாட் மாா்ச் 1994-இல் நிறுவப்பட்டதாகும்.

இதற்கிடையில், தில்லி தீயணைப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘அழைப்பு வந்தவுடன், உடனடியாக பல தீயணைப்பு வீரா்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்குள்ள பெரும்பாலான கடைகளில் மரத்தாலான கலைப்பொருள்கள், புடவைகள் மற்றும் சால்வைகள் போன்ற பொருள்கள் விற்கப்படுகின்றன, அவை மிக விரைவில் தீப்பிடிக்கக்கூடும். தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதே எங்களது முக்கியக் கவனமாக இருந்தது’ என்றது.

போக்குவரத்து மட்டுமே சவாலாக இருந்தது, ஆனால், அவா்களின் வாகனங்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன என்று அவா் கூறினாா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தீயணைப்பு இயந்திரங்களை நாங்கள் நிறுத்தினோம் என்றும் அவா் மேலும் கூறினாா்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT