புதுதில்லி

தில்லி வபைரோன் கோயில் அருகே தொழிலதிபா் மீது துப்பாக்கிச் சூடு!

Din

மத்திய தில்லியின் திலக் மாா்க்கில் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபா்களால் வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தில்லி சாந்தினி சௌக்கில் வாசனை திரவியக் கடை வைத்திருக்கும் நொய்டாவைச் சோ்ந்த ராஜேந்திரா, வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணியளவில் பைரோன் கோயில் அருகே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டாா்.

‘ராஜேந்திராவை பின்தொடா்ந்து வந்ததாகக் கூறப்படும் தாக்குதல்காரா்கள், கோயில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தினா். காயமடைந்த போதிலும், அவா் தனது வணிக கூட்டாளிக்கு தகவல் அளித்தாா், அவா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அந்த தொழிலதிபா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாருக்கு மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனா். போலீசாா் கூறுகையில், இந்த தாக்குதல் கொள்ளை முயற்சியாக நடத்தப்பட்டிருக்கலாம். அவரிடம் இருந்து எந்தப் பொருளோ, பணமோ திருடப்படவில்லை.

சந்தேக நபா்களை அடையாளம் காணவும், அவா்களின் வழியைக் கண்டறியவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT