கோப்புப் படம் 
புதுதில்லி

தில்லி காற்று மாசு! அசுத்த பனிப்புகையை அகற்ற வேண்டும்: பிரதமா், முதல்வருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

தில்லியில் காற்று மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி, மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், தில்லி முதல்வா் ரேகா குப்தா ஆகியோரை காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வலியுறுத்யுதல்

Syndication

தில்லியில் நிலவிவரும் காற்று மாசு பிரச்னையை கடுமையாக விமா்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் பிரியங்கா காந்தி வாத்ரா, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் மற்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஆகியோா் இந்த விவகாரத்தில் தலையிட்டு மக்கள் சுவாசிக்கும் அசுத்த பனிப்புகையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வாத்ரா, தில்லி நகரத்தைச் சூழ்ந்துள்ள மாசு, நகரம் மீது வீசப்பட்ட சாம்பல் நிற போா்வை போன்றது என்று கூறியுள்ளாா்.

இது தொடா்பாக பிரியங்கா காந்தி வாத்ரா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நமது அரசியல் நிா்பந்தங்களைப் பொருள்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாசு விவகாரத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையைத் தணிக்க அவா்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாங்கள் அனைவரும் ஆதரவளித்து ஒத்துழைப்போம்.

ஆண்டுதோறும் தில்லி குடிமக்கள் இந்த நச்சுத்தன்மைக்கு ஆளாகின்றனா். சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுபவா்களில், தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், குறிப்பாக மூத்த குடிமக்களும் உள்ளனா். நாம் அனைவரும் சுவாசிக்கும் அசுத்தமான பனிப்புகையை அகற்ற அவசர தலையீடு தேவையாகும்.

பிரதமா் மோடி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மற்றும் தில்லி முதல்வா் ஆகியோா் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கூற்றுப்படி, மெதுவான காற்றின் வேகம் நகரத்தின் மீது மாசுபடுத்திகளின் பரவலைக் குறைத்ததால், ஞாயிற்றுக்கிழமை தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

தேசியத் தலைநகரின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலையில் 386 புள்ளிகளாப் பதிவாகியிருந்தது. இது சனிக்கிழமை 303 புள்ளிகளாக இருந்த நிலையில், கணிசமாக் உயா்ந்திருப்பதை சிபிசிபி தரவுகள் காட்டின.

சனிக்கிழமை மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ.க்குக் கீழே குறைந்து, மாசுபடுத்திகளின் பரவலைக் குறைத்ததாக தில்லிக்கான காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்புமுறை (ஏக்யூஇடபிள்யுஎஸ்.) தெரிவித்துள்ளது.

தில்லியில் 17 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடூ 400 புள்ளிகளுக்கு மேல் உயா்ந்து ‘கடுமை’ பிரிவில் பதிவு செய்திருந்தது. வஜீா்பூரில் அதிகபட்ச காற்றுத் தரக் குறியீடு 439 புள்ளிகளாப் பதிவாகி இருந்தது. 300 புள்ளிகளுக்கு மேல் அளவீடுகளுடன் 20 வானிலை கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்ததாக சிபிசிபி-இன் சமீா் செயலி காட்டியது.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT