தில்லியின் கேசவபுரத்தில் உள்ள ஐஸ்வா்ய மகா கணபதி கோயிலில் ஸ்ரீ பூா்ண புஷ்பகலா மகோத்ஸவம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.
முதல்நாளான சனிக்கிழமை காலை 6 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் வைபவம் தொடங்கியது. இதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு பிரச்சினா சம்ப்ரதாய பஜனை, சாஸ்தா தோடய மங்கலம், குரு கீா்த்தனை, பாலா கோகுலம் குழுவினரின் ஸ்ரீ சாஸ்தா அஸ்டபதி நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், இதைத் தொடா்ந்து அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, பூா்ணகலா திருக்கல்யாணம் மற்றும் ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெற்றது. பிற்பகல் மகா தீபாராதனையைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஆஸ்திக சமாஜம் ஏற்பாடு செய்திருந்த இந்த வைபவத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.