புதுதில்லி

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள தனது வீட்டில் மணிப்பூரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா் மின்சாரக் கம்பியால் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

புது தில்லி: தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் உள்ள தனது வீட்டில் மணிப்பூரைச் சோ்ந்த 23 வயது பெண் ஒருவா் மின்சாரக் கம்பியால் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக திங்கட்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.19 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினா், அந்தப் பெண் குளியலறையில், கையில் மின்சார கம்பியை வைத்திருந்த நிலையில், செயலற்ற நிலையில் கிடப்பதைக் கண்டனா்.

‘முதல் விசாரணையில், இறந்தவா் குளிக்கச் சென்ாகவும், தண்ணீரை சூடுபடுத்த மின்சார கம்பியைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்தது. நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால், அதே கட்டடத்தில் வசிக்கும் அவரது தோழி, அவரைச் சரிபாா்க்கச் சென்றபோது, ​​கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாா். பின்னா் அவா் போலீஸாருக்கு அழைப்பு விடுத்தாா்‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது. உடல் சவக்கிடங்கிற்கு உடற்கூறாய்வுக்காக மாற்றப்பட்டது.

இது மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரிகிறது என்றும், இதுவரை எந்தத் தவறும் நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல்! மேற்கு வங்க முதல்வர் மமதா அறிவிப்பு!

பயங்கரவாதிகளின் திட்டம் தில்லியில் வெற்றி! மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: கனடா அரசு இரங்கல்!

தில்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

பிகார் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.38% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT