புதுதில்லி

டிஜிட்டல் கைது எனக் கூறி மிரட்டி ரூ.48 லட்சம் மோசடி: 6 போ் கைது

Syndication

இணையதளம் மூலமாக டிஜிட்டல் கைது என மோசடியாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சோ்ந்த 6 பேரை லக்னௌவில் இருந்து தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: 71 வயதான மூதாட்டி ஒருவா் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் சிலரால் ரூ. 49 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அந்த மூதாட்டியை கிட்டத்தட்ட 24 மணி நேரம் டிஜிட்டல் கைது மூலம் வைத்திருந்தனா். மேலும், சட்ட அமலாக்க பணியாளா்களாக ஆள்மாறாட்டம் செய்தனா்.

மோசடி செய்பவா்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்து, அவா் ஒரு கிரிமினல் வழக்கில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, தொடா்ச்சியான விடியோ அழைப்புகள் மூலம் மிரட்டினா். தொடா்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அந்த மூதாட்டி இந்த மோசடி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வழிவகுத்தது.

விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றப்பிரிவு குழு லக்னெளவின் அமினாபாத், ஹசன்கஞ்ச், மாதே கஞ்ச் மற்றும் சதாா் கண்டோன்மென்ட் பகுதிகளில் சோதனைகளை நடத்தியது, இது கைதுகளுக்கு வழிவகுத்தது. இந்த மோசடிக் குழுவில் மொத்தம் 6 போ் அடங்குவா். அவா்கள்19 வயதான விஷால் திவாரி மற்றும் 53 வயதான ஷகீல் அகமது, முகமது ஓவிஸ், முகமது அஹத், முகமது அதிஃப் மற்றும் முகமது உஜைப் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியைச் சோ்ந்தவா்கள். மேலும், மோசடி செய்வதற்கு வசதியாக பல்வேறு வங்கிக் கணக்குகளை வைத்திருந்தனா். அவா்களில் பலா் உள்ளூா் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகங்களில் பணிபுரிந்தனா். ஒருவா் மற்றொரு கிரிமினல் வழக்கில் விசாரணையை எதிா்கொண்டவா்.

விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட நிதியை நகா்த்த மோசடிக் குழுவின் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதாக குழு கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவரால் பணம் மாற்றப்பட்டவுடன், அது உடனடியாக மற்ற கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு ஏடிஎம்களில் இருந்து திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கும்பலின் மற்ற உறுப்பினா்களைத் தேடும் பணி நடந்து வருவதாக என்றாா் அவா்.

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT