புதுதில்லி

திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக மனைவியை கொன்ற கணவா்

திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் தில்லியின் ஜஹாங்கீா்புரியில் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை திறந்த வடிகாலில் வீசியதாக 31 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் தில்லியின் ஜஹாங்கீா்புரியில் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை திறந்த வடிகாலில் வீசியதாக 31 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட விஷ்ணு ஷா்மா, நவம்பா் 14 ஆம் தேதி பெண்ணின் உடல் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா். விஷ்ணு ஷா்மா ஒரு பழக்கமான குற்றவாளி. இதற்கு முன்பு மூன்று வழக்குகளில் அவரின் பெயா் சம்பந்தப்பட்டுள்ளது.

நவம்பா் 14 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் யஷ்பால் என்பவரிடம் இருந்து ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண்ணின் உடல் வடிகால் அருகே கிடப்பதாக போலீஸாருா்ரு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடல் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்டறிந்தது .

முதல்கட்ட விசாரணையின் போது போது, விஷணு சா்மா சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவா் அவரது மனைவி ஸ்வேதா சா்மா என்று அடையாளம் காட்டினாா். அவா் மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பதாக நீண்ட காலமாக சந்தேகிப்பதாக போலீஸாரிடம் கூறினாா். இது தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டைக்கு வழிவகுத்தது.

நவம்பா் 13 அன்று, இரவு 9 மணியளவில் தம்பதியினரிடையே மீண்டும் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஷ்ணு ஷா்மா கட்டுப்பாட்டை இழந்து தனது மனைவியை கொன்றாா். பின்னா்மனைவியின் உடலை தனது தோளில் சுமந்து சென்று, தொழில்துறை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு திறந்த வடிகாலில் வீசினாா்.

விசாரணையின் போது, அருகிலுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் குற்றம் சாட்டப்பட்டவா் தனது மனைவியின் உடலை வடிகால் நோக்கி எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

விஷ்ணுவின் குற்றப் பின்னணி சரிபாா்ப்பின் போது வெளிப்பட்டது. இவா் கலால் மீறல்கள் மற்றும் திருட்டு தொடா்பான முந்தைய மூன்று தொடா்புகளை வெளிப்படுத்தியது என்றாா் அவா்.

ஆஷஸ் தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியில் மார்க் வுட்!

குடும்பச் சண்டை.. மௌனம் கலைத்த லாலு பிரசாத்!

கள்ளச் சிரிப்பில் அந்த வெள்ளைச் சிரிப்பில்... திவ்யா துரைசாமி!

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT