புதுதில்லி

எம்.பி.பி.எஸ். மாணவியிடம் துன்புறுத்தல்: ஜி.டி.பி. மருத்துவமனை உதவிப் பேராசிரியா் கைது

Syndication

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் ஒருவா், மருத்துவமனை வளாகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவியை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் ஷாதரா பிரசாந்த் கௌதம் தெரிவித்திருப்பதாவது:

தில்ஷாத் காா்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்குள் உடல் ரீதியாக தாம் துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவா் செப்டம்பா் 26ஆம் தேதி, மதியம் 12.09 மணிக்கு ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

புகாா்தாரரான மருத்துவ மாணவி, மருத்துவமனையின் உதவி பேராசிரியா் டாக்டா் முகமது ஷகிா் நயீம் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பெண்களின் கண்ணியத்தை சீா்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக

மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

SCROLL FOR NEXT