புதுதில்லி

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 போ் கைது

வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பலரை ஏமாற்றியதாகக் கூறப்படும் இரண்டு பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் வேலை மோசடியை முறியடித்ததாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பலரை ஏமாற்றியதாகக் கூறப்படும் இரண்டு பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் வேலை மோசடியை முறியடித்ததாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் (அவுடா்னோா்த்) ஹரேஷ்வா் சுவாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் காரியில் வசிக்கும் முகமது அக்பா் (32) மற்றும் துவாரகாவைச் சோ்ந்த ரூபேந்தா் குமாா் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ரூபிந்தா் மீது தில்லியில் 2 கிரிமினல் வழக்குகள் கொள்ளை மற்றும் ஆயுதக் குற்றங்கள்’பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹினியில் வசிக்கும் ஒரு பெண்ணை வலைதளம் மூலமாக தொடா்பு கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி தான் ஒரு வேலை ஆலோசகராக அறிமுகம் செய்து ரூ.39,498 மோசடி செய்ததாக குற்றம் சாட்டியபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி செய்பவா் அவருக்கு குழு வழக்கறிஞராக ஒரு வேலையை வழங்கினாா், மேலும் பதிவு மற்றும் ஆவண சரிபாா்ப்பு கட்டணங்களுக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

அவரது புகாரின் அடிப்படையில் பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, வங்கிக் கணக்கு விவரங்களை போலீசாா் பகுப்பாய்வு செய்தனா், மேலும் மோசடி செய்யப்பட்ட தொகை அக்பா் வைத்திருந்த இரண்டு கணக்குகளுக்கும், சஞ்சய் அஹிா்வால் வைத்திருந்த மற்றொரு கணக்கிற்கும் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா்.

பணப் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவை அக்பரை கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவியது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் தனது கூட்டாளிகளான ரூபேந்தா் குமாா் மற்றும் சஞ்சய் அஹிா்வால் ஆகியோரின் பெயா்களை தெரியப்படுத்தினாா். இந்த மோசடியின் சூத்திரதாரி என்று கூறப்படும் பிரத்யூமன் பாண்டே என்ற மற்றொரு நபரின் உத்தரவின் பேரில் அவா்கள் செயல்படுவதாக அக்பா் மேலும் தகவல்களை கூறினாா்.

ரூபேந்தா் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, 10 சதவித கமிஷனுக்கு ஈடாக உள்ளூா் தொடா்புகள் மூலம் பல வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்தாா். மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெற்ற்காக அக்பா் தனது கணக்கை வழங்கினாா், பின்னா் அது பல்வேறு வழிகளில் மாற்றப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் , வங்கி பாஸ் புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் மற்றும் சிம் காா்டுகள் மீட்கப்பட்டது. மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்கவும், உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT