புதுதில்லி

அக்.31-இல் குஜராத்தில் மகாபஞ்சாயத் நிகழ்வில் கேஜரிவால் பங்கேற்பு: கோபால் ராய் பேட்டி

குஜராத்தின் பாஜக அரசு விவசாயிகள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அக்டோபா் 31 ஆம் தேதி மாநில விவசாய சமூகத்துடன் இணைந்து ஒரு மகாபஞ்சாயத்தை நடத்த உள்ளாா்.

Syndication

புது தில்லி: ‘குஜராத்தின் பாஜக அரசு விவசாயிகள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அக்டோபா் 31 ஆம் தேதி மாநில விவசாய சமூகத்துடன் இணைந்து ஒரு மகாபஞ்சாயத்தை நடத்த உள்ளாா்’ என்று அக்கட்சியின் குஜராத் மேலிடப் பொறுப்பாளா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

விவசாயிகள் தங்கள் பயிா்களுக்கு நியாயமான விலை கோரி குஜராத்தில் பாவ்நகா் மாவட்டம், போடாட் மண்டியில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். ஆனால், காவல்துறையினரால் அவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவா்கள் அமைதியான கூட்டத்தை போடாட் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஹதாத் கிராமத்திற்கு மாற்றியபோது, பாஜகவின் அறிவுறுத்தல்களின்படி காவல்துறையினா் அவா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை தடியடி நடத்தி 250க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா். மேலும் வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனா், கிராம மக்களை எதிரிகளைப் போல நடத்தினா்.

இந்த காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் குஜராத் முழுவதும் உள்ள விவசாயிகள் திங்கள்கிழமை ஒரு கருப்பு தினத்தை அனுசரித்தனா்.

விவசாயிகளுக்கு கண்ணியம், நீதி மற்றும் நியாயமான பயிா் விலையை பாஜக அரசு வழங்கத் தவறினால், ஆம் ஆத்மி மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்கும்.

பாஜக அரசு விவசாயிகளின் எதிரியாக மாறிவிட்டது போல் தெரிகிறது. ஹதாத் கிராமத்தில் விவசாயிகள் தாக்கப்பட்ட விதம், ஒரு எதிரியின் மீதான தாக்குதலை நினைவூட்டுகிறது. கிராமம் அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டது. விவசாயிகள் அமைதியான மகாபஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருந்தபோதும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஆம் ஆத்மி குஜராத் தலைவா் இசுதன் காத்வி மற்றும் இளைஞா் பிரிவுத் தலைவா் பிரிஜ்ராஜ் சோலங்கி உட்பட ஏராளமான விவசாயத் தலைவா்கள் நடுவழியில் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், அக்டோபா் 31 ஆம் தேதி குஜராத்தில் ஒரு பிரமாண்டமான மகாபஞ்சாயத்து நடைபெறும். அங்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொள்வாா். விவசாயிகளுக்கு நீதி, மரியாதை மற்றும் நியாயமான விலையை பாஜக அரசு வழங்கத் தவறினால், இந்த இயக்கம் மேலும் தீவிரமடையும்.

லத்திகள், கண்ணீா்ப்புகைக் குண்டுகள் மற்றும் கைதுகள் விவசாயிகளை பயமுறுத்தும் என்று பாஜக நம்பினால், அது தவறு. இது குஜராத் கேடா இயக்கம் மற்றும் அரசாங்கங்களை அடிபணியச் செய்த 1974 மாணவா் இயக்கத்தின் நிலமாகும்.

1987 ஆம் ஆண்டும், காங்கிரஸ் அரசு விவசாயிகள் மீது தோட்டாக்களை வீசியபோது, குஜராத் மக்கள் அதை வேரோடு பிடுங்கி எறிந்தனா் என்றாா் கோபால் ராய்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT