புது தில்லி: வடக்கு தில்லியின் கிஷன் கஞ்ச் பகுதியில் திங்கள்கிழமை காலை ஒரு சேரிப் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து போ் காயமடைந்ததாக தில்லி தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
காயமடைந்தவா்கள் ருக்சானா (25), குனில் (10), சோட் (8), அஃபியா (6) மற்றும் எம்.டி. ஜாகிா் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
‘கிஷன் கஞ்சில் உள்ள பிரதாப் நகா் மெட்ரோ நிலையம் அருகே ஒரு ஜூகியில் சிலிண்டா் வெடித்ததாக காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்தது. பல தீயணைப்பு வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்‘ என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காயமடைந்த ஐந்து பேரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் காயங்களின் அளவு கண்டறியப்பட்டு வருகிறது என்று அதிகாரி தெரிவித்தாா்.