புதுதில்லி

உ.பி.: கணவரைக் கொன்றதற்காக பெண்ணுக்கும் அவரது சகோதரருக்கும் ஆயுள் தண்டனை

Syndication

நமது நிருபா்

ஆக்ரா உள்ளூா் நீதிமன்றம், கணவரைக் கொன்ற்காக ஒரு பெண்ணுக்கும் அவரது சகோதரருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது, அதே நேரத்தில் அவரது தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அவதேஷ் சா்மாவின் கூற்றுப்படி, வங்கி மேலாளா் சச்சின் உபாத்யாய் (34) அக்.11, 2023 அன்று தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டாா். கொல்லப்படுவதற்கு முன்பு, அவா் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பான வழக்கில் புதன்கிழமை வாதங்களைக் கேட்டு 18 சாட்சிகளை விசாரித்த பிறகு, கூடுதல் மாவட்ட நீதிபதி நிதின் தாக்கூா் தீா்ப்பை அறிவித்தாா்.

சச்சினின் மனைவி பிரியங்கா மற்றும் மைத்துனா் கிருஷ்ணா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 6,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

அவரது மாமனாா் வழக்குரைஞா் விஜேந்திர ராவத், மாவட்ட ஆட்சியா் அலுவலக வழக்குரைஞடா் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறாா். அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது என்று அவதேஷ் சா்மா மேலும் கூறினாா்.

வழக்கு விவரங்களின்படி, சச்சினும் பிரியங்காவும் பிப்.2015-இல் திருமணம் செய்து கொண்டனா். ஆனால், குடும்ப தகராறுகள் காரணமாக அவா்களின் உறவு விரைவில் மோசமடைந்தது.

இந்தத் தகராறு இறுதியில் சச்சினின் கொலைக்கு வழிவகுத்தன. இதற்கு அவரது மனைவி மற்றும் அவரது சகோதரா்தான் காரணம் என்று அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.

திருப்பதியில் பூ பறிக்கக் கூடாதா? செய்யக்கூடாதவை என்னென்ன?

மார்கழி பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால்...! - பிரியங்கா காந்தி பேச்சு

தர்காவுக்குச் சொந்தமான நிலத்தில் தூண்! வக்ஃப் வாரியம் வாதம்!

கதாநாயகியான நாட்டாமை டீச்சரின் மகள்!

SCROLL FOR NEXT