புதுதில்லி

பைக் மீது மொ்சிடிஸ் மோதியதில் இருவா் காயம்

Syndication

மேற்கு தில்லியின் ரஜோரி காா்டன் பகுதியில் மோட்டாா் சைக்கிள் மீது மொ்சிடிஸ் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேத்தா சௌக் போக்குவரத்து சிக்னல் அருகே புதன்கிழமை அதிகாலை 12.34 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

எம்.டி. சுஃபியான் (21) மற்றும் எம்.டி. அசாம் (22) ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது, ​​அவா்களின் வாகனம் மீது மொ்சிடிஸ் காா் மோதியது. இருவரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘காரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தவும் பொறுப்பை ஏற்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 125(ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தை மொபைல் கிரைம் குழு ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களை சேகரித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT