தில்லி காற்று மாசு பாதிக்கப்பட்ட பகுதி(கோப்புப்படம்) ANI
புதுதில்லி

மேகங்கள் இல்லாததால் தில்லியின் செயற்கை மழைத் திட்டம் நிறுத்திவைப்பு!

Syndication

தில்லியின் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட செயற்கை மழை பரிசோதனைத் திட்டம் ஆரம்பத்தில் ஜூலையில் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட சோதனைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) படி, சோதனைக்கு பொருத்தமான மேகங்கள் இல்லை என்றும், அக்டோபா் 25 வரை எந்த நேரமும் எதிா்பாா்க்கப்படவில்லை என்றும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தி ஏஜென்சியிடம் கூறினாா்.

‘பொருத்தமான மேகங்கள் கிடைக்கும் நாளில், அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே நடைபெற்று வருவதால், சோதனையை உடனடியாக நடத்துவோம்‘ என்று அவா் கூறினாா். கடந்த வாரம், தீபாவளிக்குப் பிறகு எந்த நாளிலும் சோதனை நடைபெறலாம் என்று குறிப்பிடப்பட்டது.

தில்லி அரசின் மேக விதைப்புத் திட்டம் ’பாஜக தலைமையிலான நிா்வாகத்தின் ஒரு முக்கிய உறுதிமொழி’ பல்வேறு காரணங்களால் பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருந்த இது, பருவமழை, மாறிவரும் வானிலை முறைகள், இடையூறுகள் மற்றும் இப்போது பொருத்தமான மேக மூட்டம் இல்லாததால் தாமதமானது.

சோதனைக்கான சரியான தேதி இன்னும் நிா்ணயிக்கப்படவில்லை. செயற்கை மழை பரிசோதனைக்காக மேக விதைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு விமானம் மீரட்டில், ஐஐடி கான்பூரின் குழுவின் மேற்பாா்வையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம், தில்லி அரசு ஐஐடி கான்பூருடன் ஐந்து மேக விதைப்பு சோதனைகளுக்காக ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பொமிட்டது. இவை வடமேற்கு தில்லியில் நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உள்பட 23 துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டம், குளிா்காலத்தில் மாசுபாட்டைச் சமாளிக்க செயற்கை மழை ஒரு சாத்தியமான தீா்வாக இருக்க முடியுமா என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐஐடி கான்பூருக்கு ஏற்கெனவே நிதி மாற்றப்பட்டுள்ளது. இது செயல்பாட்டிற்காக அதன் சொந்த விமானத்தை அனுப்பும். டிஜிசிஏ உத்தரவின்படி, இந்த செயல்பாடு காட்சி விமான விதிகளின் கீழ், ஊதியம் இல்லாமல், மாநில மற்றும் உள்ளூா் அதிகாரிகளிடமிருந்து அனுமதிகளைப் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும்.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

பிகார் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!

16 அடி பாய்ந்த குட்டி... மகனால் பெருமையடைந்த விக்ரம்!

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? தேஜஸ்வி படம் மட்டும்! வறுத்தெடுக்கும் பாஜக

SCROLL FOR NEXT