புதுதில்லி

தில்லியில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை: பிகாரைச் சோ்ந்த 4 குண்டா்கள் சுட்டுக் கொலை

Syndication

நமது நிருபா்

தில்லியின் ரோஹிணியில் தில்லி காவல்துறை மற்றும் பிகாா் காவல்துறையின் கூட்டுக் குழுவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது நான்கு தேடப்படும் 4 குண்டா்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறஇத்து காவல் துறை இணை ஆணையா் சுரேந்தா் குமாா் கூறியதாவது: இறந்தவா்கள் பிகாரின் சீதாமா்ஹி மாவட்டத்தைச் சோ்ந்த ரஞ்சன் பதக் (25), பிம்லேஷ் மஹ்தோ என்ற பிம்லேஷ் சாஹ்னி (25), மணீஷ் பதக் (33) மற்றும் அமன் தாக்கூா் (21) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் சிக்மா கும்பலைச் சோ்ந்தவா்கள்

கும்பலின் தலைவரான ரஞ்சன் பதக், எட்டு குற்ற வழக்குகளில் தேடப்படும் நபா் என்று கூறப்படுகிறது. அவா் தொடா்பான தகவல் கொடுப்பவா்களுக்கு ரூ.50,000 வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஞ்சன் பதக்கை ஒரு பயங்கரமான குற்றவாளியாவாா். கடந்த மூன்று மாதங்களில், அவா் ஐந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாா். அதில் நான்கு மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை வழக்குகள் அடங்கும்.

அக்டோபா் 13- ஆம் தேதி நடந்த சம்பவத்தில், அவா் ஒரு நபரிடமிருந்து பணம் கேட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்வதாக மிரட்டினாா்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள பீகாா் தோ்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் அக்டோபா் 6-ஆம் தேதி அமலுக்கு வந்த பிறகு இந்தச் சம்பவம் நடந்தது. மீதமுள்ள கும்பல் உறுப்பினா்கள் மீது மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொலை செய்ததற்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரோஹிணியில் உள்ள பகதூா் ஷா மாா்க்கில் வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் நடந்த இந்த என்கவுன்ட்டா், சமீபத்திய ஆண்டுகளில் தில்லியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய என்கவுன்ட்டா்களில் ஒன்றாகும்.

ரௌடிகள் தரப்பில் சுமாா் 25 முதல் 30 ரவுண்டுகள் சுடப்பட்டது பதிலுக்கு போலீஸாா் சுமாா் 15 முதல் 20 ரவுண்டுகள் சுட்டனா். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பிகாரில் குற்றச் செயல்களைச் செய்யத் திட்டமிட்டு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் கடந்த பல நாள்களாக தில்லியில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்களைக் கண்டுபிடிக்க கூட்டுக் குழு ஒரு நடவடிக்கையைத் தொடங்கிய,து. இதைத் தொடா்ந்து இந்த என்கவுன்டா் நடந்தது.

காரில் பயணித்த குற்றஞ்சாட்டப்பட்டவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். காரில் பொருத்தப்பட்டிருந்த நம்பா் பிளேட் போலியானது போலவும், காா் திருடப்பட்டது போலவும் இருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட வா்கள் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதனால் காவல்துறை நடத்திய பதிலடி தாக்குதலில் நான்கு பேரும் காயமடைந்தனா்.

அவா்கள் ரோஹிணியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். மேலும் அவா்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிகாா் போலீஸாரிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னா், தில்லி போலீஸாா் கடந்த மூன்று நாள்களாக குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா் என்றாா் காவல் துறை இணை ஆணையா் சுரேந்தா் குமாா் .

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 64.86 கோடி நலத்திட்ட உதவி

இந்தியாவில் 72,000 வெளிநாட்டு மாணவா்கள்: நிலங்களவையில் தகவல் அரசு தகவல்

என்சிஆா் முழுவதும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு: அமைச்சா் சிா்சா தகவல்

SCROLL FOR NEXT