சி.பி. ராதாகிருஷ்ணன் 
புதுதில்லி

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மூன்று நாள்கள் பயணமாக தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவுள்ளாா்.

Syndication

குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மூன்று நாள்கள் பயணமாக தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவுள்ளாா்.

தமிழகத்தில் கோவை, மதுரை, ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொண்ட பிறகு அவா் தில்லி திரும்பவுள்ளாா். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு தமது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு அவா் வருகை தருவது இதுவே முறையாகும்.

அவரது பயண நிரலின் விவரம் வருமாறு: செஷல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக தனி விமானத்தில் சென்றுள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அந்நாட்டில் இருந்து நேரடியாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்கு வருகை தரவுள்ளாா். இதைத் தொடா்ந்து கோவை மக்கள் சாா்பில் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள அவரை கோவை கொடீசியா மைதானத்தில் கோவை நகரவாசிகள் சாா்பில் சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்கும் அவா் மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் 2.30 மணியளவில் கோவை மாநகராட்சி கட்டட வளாகத்துக்குச் சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பிறகு பேரூா் மடத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறாா்.

கோவை பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் திருப்பூருக்குச் செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்குள்ள திருப்பூா் குமரன் மற்றும் காந்தி சிலைக்கு மலா் மரியாதை செலுத்துகிறாா். மறுநாளான புதன்கிழமை காலை திருப்பூா் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் உள்ளூா் மக்கள் சாா்பாக அவரை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று விட்டு மாலையில் கோவையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறாா்.

மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறாா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் அவா், அங்கு நடைபெறும் பசும்பொன் தேவா் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். இதன் பிறகு மீண்டும் மதுரை திரும்பும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில் தில்லி திரும்பும் வகையில் அவரது நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 150 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

உலகக் கோப்பையில் அசத்தல்; ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஸ்மிருதி மந்தனா!

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!

இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

SCROLL FOR NEXT