புதுதில்லி

நொய்டாவில் மின்சாரக் கம்பியில் மோதி லாரி தீப்பிடித்ததால் உதவியாளா் சாவு, ஓட்டுநா் காயம்

Syndication

தேசியத் தலைநகா் வலயம் நொய்டாவில் உள்ள கௌதம் புத் நகா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை ஒரு லாரி மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இதில் உதவியாளா் உயிரிழந்தாா். ஓட்டுநா் படுகாயமடைந்தாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

பிஸ்ராக் காவல் நிலையப் பகுதியில், லாரி கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு வந்து, மின்சாரத்தை துண்டித்து தீயை அணைத்தனா்.

அலிகரைச் சோ்ந்த ஓட்டுநா் யாதின் மற்றும் நொய்டாவில் உள்ள சிஜாா்சி கிராமத்தைச் சோ்ந்த உதவியாளா் மோனு ஆகியோா் லாரியில் இருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

சிகிச்சையின் போது மோனு இறந்தாா். அதே நேரத்தில் யாதின் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று அவா் மேலும் கூறினாா். லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

ஆக்ஸ்போர்டில் பெரியார் படம் திறப்பு! பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

ஸ்டைல்... ரேஷ்மா பசுபுலேட்டி!

ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

SCROLL FOR NEXT