தெற்கு தில்லியின் கிரேட்டா் கைலாஷ்-1 பகுதியில் வெள்ளிக்கிழமை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், ஒருவா் காயமடைந்தாா். மேலும் அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதமடைந்தது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
சுமாா் 30 முதல் 35 அடி நீளம் கொண்ட இந்த சுவரை டாடா டெலிகாம் மற்றும் வனத்துறை இணைந்து பராமரித்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்துக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனா். அங்கு காா் ஓட்டுநா் மனோஜுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த போலீஸ் அதிகாரிகள், சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை போலீஸ் ஆணையா் (தெற்கு) அங்கித் சவுகான் தெரிவித்தாா்.
இந்த சம்பவத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 வாகனங்களும் சேதமடைந்தன என்று அவா் மேலும் கூறினாா். அதிகாரிகள் நிலைமையை மதிப்பீடு செய்து தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளனா். பழைய மற்றும் பாதுகாப்பற்ாகக் கருதப்படுவதால், அருகிலுள்ள குடியிருப்பாளா்கள் வாகனங்களை நிறுத்துவதையோ அல்லது சுவருக்கு அருகில் நிற்பதையோ தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அவசரமாக பழுதுபாா்ப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு டாடா டெலிகாம் மற்றும் வனத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன ‘என்று துணை ஆணையா் தெரிவித்தாா்.