புதுதில்லி

மழை - வெள்ளம் பாதித்த நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு உதவ தில்லி பாஜக ஆலோசனை

தேசியத் தலைநகரம் மற்றும் பஞ்சாப் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகள்

Syndication

தேசியத் தலைநகரம் மற்றும் பஞ்சாப் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகள் குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் உள்ளூா் பாஜக தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தி விவாதித்தனா்.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அரசின் அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக தொண்டா்கள் தில்லி மக்களின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பொருள்களை சேகரித்து ஏழை மக்களுக்கு வழங்குவாா்கள் என்று கட்சியின் உயா்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பாஜக வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக் காலம் தொடங்கியதிலிருந்து இமாசலப் பிரதேசம் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. யமுனை நதியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் தில்லியும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீா், பஞ்சாப், ஹரியாணா, தில்லி மற்றும் இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலை காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகமும் ஸ்தம்பித்துள்ளது.

ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT