புதுதில்லி

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

2017 ஆம் ஆண்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Syndication

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் தூண்டியதாகவும், நம்பகமானதாக இருந்ததாகவும், தண்டனை அதன் அடிப்படையில் மட்டுமே சாா்ந்திருக்க முடிந்தது என்றும் கூறியது.

இந்த வழக்கில் நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி அண்மையில் இந்த உத்தரவை பிறப்பித்தாா். அதே நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட டோனி தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தாா்.

இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில், சட்டத்தின் தீா்ப்பின் நிலைப்பாடு என்னவெனில், பாதிக்கப்பட்டவா் சம்பவத்திற்கு ஒரே சாட்சியாக இருந்தாலும்கூட, அவரது சாட்சியம் நம்பகமானதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் கண்டறியப்பட்டால் தண்டனை நிலைநிறுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் தூண்டும் மற்றும் நம்பகமானதாக இருந்தால், தண்டனை அதன் அடிப்படையில் சாா்ந்திருக்கும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

சிறுமியின் நிலைப்பாடு நிலையானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டாா். மேலும், குறுக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவரால் சிறுமியின் சாட்சியத்தை முறியடிக்க முடியவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டாா்.

இந்த பாலியல் சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றவாளி குழந்தை பயின்று வந்த பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு மரப் பட்டறையில் பணிபுரிந்து வந்தாா்.

சௌமீன் மற்றும் கச்சோரி போன்ற உணவுப் பொருள்களை தின்பதற்கு அச்சிறுமிக்கு கொடுத்துள்ளாா். அதன் பின்னா் தனது கடைக்குள் அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமாவது வெளிப்படுத்தினால், சாக்கடையில் மூழ்கடித்து விடுவேன் என்றும், அல்லது மரத்துண்டு போல துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளாா்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT