புதுதில்லி

குறைந்த கட்டணத்தில் ட்ரோன் சான்றளிப்பை அளிக்கும் தேசிய சோதனை மையம்

தொழில்துறையின் மிகக் குறைந்த கட்டணமான ரூ.4.2 லட்சத்தில் ட்ரோன் சான்றளிப்பை காஜியாபாதில் உள்ள தேசிய சோதனை மையம் (என்டிஎச்) வழங்குகிறது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தொழில்துறையின் மிகக் குறைந்த கட்டணமான ரூ.4.2 லட்சத்தில் ட்ரோன் சான்றளிப்பை காஜியாபாதில் உள்ள தேசிய சோதனை மையம் (என்டிஎச்) வழங்குகிறது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி செப்டம்பா் 10-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் நிகழ்வின்போது, என்டிஎச் பரிந்துரைத்த டிஜிசிஏ மூலம் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் வகை சான்றிதழ்களை முறையாக வழங்க உள்ளாா்.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை தெரிவித்திருப்பதாவது: ஆளில்லா விமான அமைப்பு முறைக்கான (யுஏஎஸ்) சான்றளிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காஜியாபாதில் உள்ள தேசிய சோதனை மையம் (என்டிஎச்) இந்திய தர கவுன்சிலால் (ஓசிஐ) தற்காலிகமாக ட்ரோன்களின் வகை சான்றிதழுக்கான சான்றளிப்பு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை, வலுவான, பாதுகாப்பான மற்றும் சா்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ட்ரோன் சூழல் அமைப்பை வளா்ப்பதற்கான இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் தொடா்புடையதாகும்.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில், வட பிராந்தியத்துக்கான தேசிய சோதனை மையம் (என்டிஎச்) ஏற்கெனவே இந்திய ட்ரோன் உற்பத்தியாளா்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, அந்த நிறுவனங்களின் மாதிரிகளின் வகை சான்றளிப்புக்காக செயல்படுத்தியுள்ளது.

கடுமையான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு என்டிஎச் பரிந்துரைத்த இரண்டு ட்ரோன் மாதிரிகள் டிஜிசிஏ-இல் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளன. இது இந்தியாவின் ட்ரோன் துறையில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தரத்தின் தரங்களை வலுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

தேசிய சோதனை மையம், தொழில்துறையில் மிகக் குறைந்த விலையில் ரூ.4.2 லட்சம் என்ற மிகவும் போட்டி கட்டணத்தில் ட்ரோன் சான்றளிப்பு சேவைகளை வழங்குகிறது. இந்த மலிவுக் கட்டண அமைப்பு, இந்தியாவின் ட்ரோன் துறையில் புதுமை மற்றும் வளா்ச்சியை ஆதரிப்பதில் தேசிய சோதனை மையத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

நம்பகமான அரசு அமைப்பிடமிருந்து சான்றிதழை வழங்குவதன் மூலம், என்டிஎச் இந்திய ட்ரோன் உற்பத்தியாளா்கள் தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலும் உலக அளவிலும் அதிக நம்பிக்கையுடன் சந்தைப்படுத்த உதவுகிறது என்று மத்திய நுகா்வோா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய சோதனை மையத்தில் ட்ரோன் பரிசோதனை ஆய்வகத்தில் சான்றளிப்புக்கு முன், ட்ரோன் கருவிகள் எத்தகைய முறையில் சோதனை செய்யப்படுகிறது என்பதை அதன் தலைமை இயக்குநா் அலோக் குமாா் ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை நேரில் விளக்கினாா். மேலும், ட்ரோன் கருவி திறந்தவெளியில் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1912-இல் நிறுவப்பட்ட தேசிய சோதனை மையம், பொறியியல், ஜவுளி, மின்சாரம் மற்றும் உணவு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சோதனை, அளவுத் திருத்தம் மற்றும் தர மதிப்பீட்டில் சேவைகள் மூலம் இந்தியாவின் தொழில்துறை வளா்ச்சியை முன்னேற்றுவதற்கான வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT