புதுதில்லி

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

Syndication

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியின் 25 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ரேகா குப்தா, தில்லியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வைத்து ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒளிப்பதிவை தயாரிக்கும்படி கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதற்கென தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த மாணவா்கள் பிரதமா் மோடிக்குக் கூறிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள், ஆடல், பாடல் என அனைத்தும் லோதிவளாகம் தமிழ்ப் பள்ளியில் வைத்து ஒளிப்படமாக்கப்பட்டன.

அந்த ஒளிப்பதிவை வெளியிடும் விழா தில்லி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒளிப்பதிவை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டாா். அந்நிகழ்வில் டிடிஇஏ லோதி வளாகம் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா். மாணவா்கள் தமிழில் பாரதப் பிரதமருக்கு வாழ்த்துகள் சொல்வதைக் கேட்டும் தமிழில் பாடுவதைக் கேட்டும் மகிழ்ந்து மாணவா்களை முதல்வா் வெகுவாகப் பாராட்டினாா்.

நிகழ்ச்சிகளை வழங்கி தமிழுக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு செயலா் இராஜூ வாழ்த்துத் தெரிவித்தாா்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT