புதுதில்லி

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

தினமணி செய்திச் சேவை

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

தெற்கு தில்லியின் கல்காஜியிலிருந்து வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் நோக்கி இரு நவராத்திரி குழுக்கள் திங்கள்கிழமை இரவு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தன.

எம்ஜி சாலையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் அருகே யார் மற்றொருவரை முந்திச் செல்வது மற்றும் அதிக சப்தமுடன் ஒலி பெருக்கியில் இசை பாடிச் செல்வது தொடர்பாக இரு குழுக்களுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு இரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. மற்றொரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

இருவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸôர், ஐடிஓ முதல் ராஜ்காட் வரையில் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் வட கிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, கன்னையா (எ) விவேக் (21) என்ற நபரையும் 17 வயது சிறுவனையும் போலீஸôர் கைது செய்தனர். மோதலின்போது பயன்படுத்தப்பட்ட கத்தி கன்ஹையாவிடமிருந்து கைப்பற்றப்பட்டது. விசாரணையின்போது, தனது குற்றத்தை கன்னையா ஒப்புக்கொண்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

மக்களால் மாற்றப்பட்ட முடிவு! நிறுத்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்!

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

இன்று நல்ல நாள்!

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT