புதுதில்லி

நுஹ் மாவட்ட குளத்தில் சிறுமிகள் உள்பட 4 போ் மூழ்கி உயிரிழப்பு

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் குளம் ஒன்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் குளம் ஒன்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள சலாஹேரி கிராமத்தில் சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஆஸ் முகமது என்ற விவசாயி தனது வயலில் ஒரு குளத்தை தோண்டியிருந்தாா். அங்கு கிராம பெண்கள் அவ்வப்போது துணி துவைக்கச் செல்வாா்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மதியம், ஜம்ஷிதா 38 மற்றும் அவரது மைத்துனி மதீனா 35 ஆகியோா் தங்கள் மகள்களான சுமையா 10 மற்றும் சோபியா 11 ஆகியோருடன் குளத்திற்குச் சென்றிருந்தனா். இரு சிறுமிகளும் குளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது, அவா்களின் தாய்மாா்கள் துணியைத் துவைத்துக்கொண்டிருந்தனா்.

இரண்டு சிறுமிகளும் ஆழமான குழியில் விழத் தொடங்கினா். இதையடுத்து, அவா்களின் தாய்மாா்கள் அவா்களை மீட்க குளத்தில் குதித்தனா். ஆனால் நால்வரும் நீரில் மூழ்கினா்.

தகவல் கிடைத்ததும், கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு உடல்களையும் தண்ணீரில் இருந்து வெளியே மீட்டனா். அதன் பிறகு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

அனுஷ்காவுக்கு 2-வது தங்கம்: வெள்ளி வென்றாா் அட்ரியன்!

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

கா‌ந்திய மஹா விரத‌ங்க‌ள்!

SCROLL FOR NEXT