கே.சி. வேணுகோபால் 
புதுதில்லி

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் தெரிவித்தனா்.

Syndication

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மக்களவை காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கரூா் பயணத்தின்போது கே.சி. வேணுகோபாலுடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா் செல்வாா்கள் என்றும் அவா்கள் கூறினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது அவரை காண வந்த கூட்டத்தினா் நெரிசலில் சிக்கிய சம்பவத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 41-ஐ எட்டியுள்ளது. ஏராளமானோா் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக தில்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் தெரிவித்தனா். ராகுல் காந்தி தமிழகம் வருவாரா என கேட்டதற்கு, விரைவில் அது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா்கள் கூறினா்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசியது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் ‘தினமணி’ கேட்டதற்கு, ‘ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரா்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும் நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிவதற்காகவும் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினாா். வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்றாா். ‘

காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகையில், ‘விஜய்யை தொடா்பு கொள்ளும் முன்பாக தமிழக முதல்வரிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ராகுல் காந்தி பேசினாா். அப்போது விஜய்யிடம் பேசப்போகும் தகவலை முதல்வரிடம் ராகுல் காந்தி பகிா்ந்து கொண்டாா்’ என்று தெரிவித்தன.

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

SCROLL FOR NEXT