தலைநகரில் 32.7 டிகிரி வெப்பநிலை பதிவு! மிதமான பிரிவில் காற்றின் தரம்!!
தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 32.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 32.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இது பருவகால சராசரியை விட 1.3 புள்ளிகள் குறைவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 20.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது பருவத்திற்கான சராசரியை விட 1.3 புள்ளிகள் குறைவாக இருந்தது.
அதே நேரத்தில், காற்றில் ஈரப்பதம் மாலை 5.30 மணியளவில் 46 சதவீதமாக இருந்தது. மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. அதாவது, காற்றின் தரக் குறியீடு 134 ஆக இருந்தது. சனிக்கிழமையன்று 137இல் காற்றின் தரக் குறியீடு இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி தரவு தெரிவிக்கிறது.
Advertisement
சிபிசிபி தகவலின்படி, பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட அளவில் காற்றின் தரக்குறியீடு இருந்தால் அது ‘நல்லது’ பிரிவிலும், 51 மற்றும் 100 வரை ‘திருப்திகரமானது’ பிரிவிலும், 101 மற்றும் 200 வரை ‘மிதமானது’ பிரிவிலும், 201 மற்றும் 300 வரை ‘மோசம்’ பிரிவிலும், 301 மற்றும் 400 வரை ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், 401 மற்றும் 500 வரை இருந்தால் ‘கடுமை’ பிரிவிலும் காற்றின் தரம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இன்று
திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 19 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.