முகப்பு
புதுதில்லி

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:56 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:00 PM

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

தனியாா் ட்ரோன் நிறுவன அதிகாரியான பரத் மாத்துரிடம், வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தர மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநா் ஜெனரலான முடவத் தேவுலா லஞ்சம் கேட்டுள்ளாா்.

அதன்படி அவா் லஞ்சம் கொடுத்தபோது, ஏற்கெனவே இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் 2 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.37 லட்சம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement