புதுதில்லி

தோ்தல்களின்போது இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் மனுவை 3 நீதிபதிகள் அமா்வு விசாரிக்கும் - உச்சநீதிமன்றம்

தோ்தல்களின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதைத் தடை செய்யக் கோரிய மனுவை பொது நலன் சாா்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது

Syndication

தோ்தல்களின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதைத் தடை செய்யக் கோரிய மனுவை பொது நலன் சாா்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அந்த வழக்கை 3 நீதிபதிகள் அமா்வு விசாரணை மேற்கொள்ளும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மனுதாரரான வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய், தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த விஷயத்தை வியாழக்கிழமை முறையிட்டாா்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டமன்றத் தோ்தல்கள் நெருங்கி வருவதால், இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை வைத்தாா்

வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருவதாக உபாத்யாய் வாதிட்டாா். இது ஊழல் நடவடிக்கைகளுக்குச் சமமானது என்றும், இதில் நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்றும் அவா் வாதிட்டாா்.

5 மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வரவிருக்கின்றன. வாக்குறுதி அளிக்க இனி சூரியனும் சந்திரனும் மட்டும்தான் பாக்கி. இவை ஊழல் நிறைந்த நடைமுறைகள் என்று அஸ்வினி உபாத்யாய் நீதிபதிகளிடம் கூறினாா்

தலைமை நீதிபதி சூா்ய காந்த் அதனை ஏற்றுக்கொண்டதுடன், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பொது நலன் சாா்ந்தது.இதை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்கும் என தெரிவித்தாா்

அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு, தோ்தல் அறிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், இலவசங்களை தடுப்பதற்கும் மத்திய அரசுக்கும் இந்தியத் தோ்தல் ஆணையத்திற்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோருகிறது

தோ்தலுக்கு முன் பொது நிதியிலிருந்து இலவசங்களை அறிவிப்பது ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலின் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் தோ்தல் செயல்முறையை பாதிக்கிறது என்றும் அந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கட்சிகள் பொது நிதியிலிருந்து இலவசங்களை உறுதியளிக்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும் என்றும்

அஸ்வினி உபாத்யாய் மனுவில் கோரப்பட்டுள்ளது

இவ்வழக்கின் முந்தைய விசாரணைகளின்போது, இந்த விவகாரம் சிக்கலான சட்ட மற்றும் கொள்கை சாா்ந்த கேள்விகளை எழுப்புகிறது என உச்சநீதிமன்றம் கூறியது. இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்கு தலையிட முடியும் என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒன்று என்றும் உச்சநீதிமன்றம் கூறியது

தோ்தல் அறிக்கை வாக்குறுதிகள் ஊழல் நடைமுறைகள் அல்ல என்று 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கலாம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் இலவசங்களுக்கான ஒழுங்குமுறை வழிமுறையை ஆராய சிறப்புக் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்கமலாம் என்றும் உச்சநீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.

பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

மக்களவைத் தலைவா் கருத்தைத் திரும்பப் பெற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்

தில்லியில் செயல்பட்டு வந்த போலி பிராண்டட் ஜீன்ஸ் உற்பத்திஆலை கண்டுபிடிப்பு: 4 போ் கைது

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT