பிரதிப் படம் 
புதுதில்லி

பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் இறந்து கிடந்த மூவா்

தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டு்பிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டு்பிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மேம்பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்தை அடைந்ததும், அவசரகால பணியாளா்கள் வாகனத்திற்குள் மூன்று போ் இறந்து கிடந்ததைக் கண்டனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் மற்றும் தடயவியல் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

இறந்தவா்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவா். உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும், மதிப்புமிக்க பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் தற்கொலையாகத் தெரிகிறது. இருப்பினும், இறப்புக்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

அமெரிக்க ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு முழுப் பாதுகாப்பு: மத்திய வேளாண் அமைச்சா் விளக்கம்

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் 3 கற்சிலைகள் கண்டெடுப்பு

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 50 பவுன் நகையை மீட்டுத் தரக்கோரி சாலை மறியல்

அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலா் வா்த்தகம் சாத்தியம்: பியூஷ் கோயல்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

SCROLL FOR NEXT