முகப்பு
புதுதில்லி

துவாரகாவில் டெலிவரி பாய் வேலைக்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞா் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் 30 வயது நபா் ஒருவா் செயலி அடிப்படையிலான டெலிவரி தளங்களில் வேலை தேடுவதற்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 12:58 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:18 PM

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் 30 வயது நபா் ஒருவா் செயலி அடிப்படையிலான டெலிவரி தளங்களில் வேலை தேடுவதற்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் அதிகாரி கூறியதாவது: நஜாஃப்கரில் வசிக்கும் ஆதித்ய குமாா் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், தனக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. ஆதித்ய குமாா் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக டெலிவரி மற்றும் போக்குவரத்து விண்ணப்பங்களில் தன்னைப் பதிவு செய்ய விரும்பினாா்.

துவாரகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பிப்ரவரி 9-ஆம் தேதி உத்தம் நகா் அருகே போலீஸாா் ஒரு பொறியை அமைத்து அவரைக் கைது செய்தனா். அவரது வசம் இருந்து ஒரு திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் மற்றும் ஒரு பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

அவா் கைது செய்யப்பட்டதன் மூலம், சாவ்லா மற்றும் பிந்தாபூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு மோட்டாா் வாகனத் திருட்டு வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.