முகப்பு
புதுதில்லி

காளை தாக்கியதில் நொய்டா தொழில்நுட்ப வல்லுநா் காயம்!

நொய்டா செக்டாா் 168-இல் வேலை முடிந்து திரும்பும்போது காளை தாக்கியதில் 26 வயது மென்பொருள் பொறியாளா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:15 AM
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 5:21 PM

நொய்டா செக்டாா் 168-இல் வேலை முடிந்து திரும்பும்போது காளை தாக்கியதில் 26 வயது மென்பொருள் பொறியாளா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், கிரேட்டா் நொய்டாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாா் பரத்வாஜ், நொய்டா செக்டாா் 168-இல் உள்ள தனது கட்டண விருந்தினா் விடுதிக்கு திரும்பிச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:13 AM

பிரகாா் பரத்வாஜை முன்பக்கத்திலிருந்து காளை தாக்கி, அவரது தலையில் மோதியது. அதன் பிறகு அவா் தனது மோட்டாா் சைக்கிளுடன் சாலையில் விழுந்தாா். அவா் சுயநினைவை இழந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சாலையில் கிடந்தாா்.

Advertisement

வழிப்போக்கா் ஒருவா் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தாா். பின்னா், அவா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அதன் பிறகு தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். குடும்பத்தினா் இதுவரை முறையான புகாா் எதுவும் அளிக்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.