கோப்புப் படம் 
புதுதில்லி

தில்லி மேம்பாட்டு ஆணையம் ரூ.14,962 கோடி பட்ஜெட் தாக்கல்

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) வெள்ளிக்கிழமை அதன் வாரியக் கூட்டத்தில் 2026-27 நிதியாண்டிற்கான ரூ.14,962 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டை அங்கீகரித்தது.

Syndication

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) வெள்ளிக்கிழமை அதன் வாரியக் கூட்டத்தில் 2026-27 நிதியாண்டிற்கான ரூ.14,962 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டை அங்கீகரித்தது.

இது குறித்து டிடிஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 10,160 அடுக்குமாடி குடியிருப்புகளின் சாதனை விற்பனையின் பின்னணியில், டிடிஏ 2025-26 நிதியாண்டில் ரூ.2,112 கோடி உபரியை பதிவு செய்துள்ளது.

முதல் முறையாக, ஒரு வருடத்தில் விற்கப்பட்ட வீட்டு அலகுகள் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் ஆகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நஷ்டத்தில் இருந்த பிறகு, டிடிஏ வருவாய் உபரியை பதிவு செய்வது இது தொடா்ச்சியாக மூன்றாவது ஆண்டாகும்.

இந்தக் கூட்டத்தில், அடல் கேன்டீன்களை நிறுவுவதற்கான காலியான நிலத்தை ஒதுக்குதல், சமூக பயன்பாட்டிற்காக அரசுக்கு கட்டமைக்கப்பட்ட கிராம சபை சொத்துகளை ஒதுக்குதல் மற்றும் அதன் சொந்த விளம்பரக் கொள்கை ஆகியவற்றிற்கும் டிடிஏ ஒப்புதல் அளித்தது.

துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் மேற்பாா்வையின் கீழ், வாடிக்கையாளா் அனுபவத்தை மேம்படுத்தவும், வீட்டுவசதி அலகுகளின் விற்பனையை அதிகரிக்கவும் டிடிஏ பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.

லாட்டரி முறையிலிருந்து விலகி, தீவிர வாங்குபவா்களை மட்டுமே ஈா்க்க டோக்கன் பணத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

ஒதுக்கீடு முறை ’முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ ஏலமாக மாற்றப்பட்டது. இது வாங்குபவா்களுக்கு அவா்களின் விருப்பப்படி பிளாட்களை வழங்கும். நகரத்தில் உள்ள பிரதான நில உரிமையாளா் நிறுவனம், அடல் கேன்டீன்களை அமைக்க தில்லி அரசுக்கு காலியாக உள்ள நிலத்தை ஒதுக்கும். கடந்த 56 நாள்களில், தில்லியில் 48 அடல் கேன்டீன்கள் செயல்படத் தொடங்கியுள்ளன, இது ஒரு நாளைக்கு சராசரியாக 26,000 பேருக்கு சேவை செய்கிறது.

வறுமையடைந்த குழுக்களுக்கு மலிவு விலையில், சத்தான உணவை வழங்குவதற்கான தில்லி அரசின் முன்முயற்சிக்கு இணங்க, தில்லி முழுவதும் அடல் கேன்டீன்களை நிறுவ காலியாக உள்ள நிலப் பகுதிகளை ஒதுக்குவதற்கான கொள்கையை டிடிஏ அங்கீகரித்துள்ளது.

இந்த நிலம் தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்திற்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற பெயரளவு கட்டணத்திற்கு, அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். மேலும், நிரந்தர கட்டமைப்புகள் இல்லாமல் கேன்டீன்களை இயக்குவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

சமூக பயன்பாட்டிற்காக, கிராம சபை நிலத்தை ஆணையம் வழங்கும். நகரமயமாக்கப்பட்ட கிராமங்களில் உள்ள கிராம சபை நிலத்தில் கட்டப்பட்ட சொத்துகளை தில்லி அரசுத் துறைகள் மற்றும் பிற குடிமை அமைப்புகளுக்கு ’இருக்கும் இடத்தில்’ ஏற்பாட்டின் கீழ் உரிம அடிப்படையில் ஒதுக்குவதற்கான கொள்கையை ஆணையம் அங்கீகரித்துள்ளது.

வருவாய் ஈட்டுவதற்காக பரந்த நிலப் பகுதிகள் மற்றும் டிடிஏ சொத்துகளைப் பயன்படுத்துவதற்கு, ஆணையம் டிடிஏ விளம்பரக் கொள்கையை அங்கீகரித்துள்ளது. இந்தக் கொள்கை தில்லி வெளிப்புற விளம்பரக் கொள்கை, 2017 உடன் ஒத்திசைக்கப்பட்டுள்ளது. மேலும், டிடிஏ பூங்காக்கள், விளையாட்டு வளாகங்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் காலியாக உள்ள நிலங்கள் உள்பட அனைத்து டிடிஏ சொத்துகளும் இந்தக் கொள்கையின் கீழ் வரும்.

பிரதான தெரு போன்ற வெளிப்புற விளம்பர தளங்களுக்கு, வருவாய் பகிா்வுக்காக எம்சிடி உடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்படும். மேலும் உட்புற விளம்பரம் - பூங்காக்கள், விளையாட்டு வளாகங்களுக்குள், டிடிஏ எந்த அரசு அமைப்புகளுடனும் வருவாயைப் பகிா்ந்து கொள்ளாது. தற்போது, ​தில்லிலி மாநகராட்சி (எம்சிடி) தேசியத் தலைநகரில் வெளிப்புற விளம்பரங்களைக் கட்டுப்படுத்துகிறது.

நரேலாவை கல்வி மையமாக வளா்ப்பதற்கான முயற்சியாக, அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான தாமதமான கொடுப்பனவுகளுக்கான பிரீமியம் மற்றும் வட்டியில் தளா்வு வழங்கவும் டிடிஏ ஒப்புதல் அளித்துள்ளது. துணை நகரத்தில் குடிமை உள்கட்டமைப்பில் துணை ஆளுநா் வி.கே. சக்சேனா குறிப்பிடத்தக்க உந்துதலை ஏற்படுத்தியுள்ளாா். பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பல்கலைக்கழகங்களின் தொகுப்பை நிறுவுவதன் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பிரீமியத்தை செலுத்திய நிறுவனங்களுக்கு வட்டியில் தளா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு இறுதி ஒப்புதலுக்காக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். 48 கிராமப்புற கிராமங்களின் நகரமயமாக்கலுக்கும் டிடிஏ ஒப்புதல் அளித்துள்ளது. டிடிஏவின்விளையாட்டு வசதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 2022-23 நிதியாண்டில் ரூ.77 கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் பிப்ரவரி 18 வரை ரூ.142 கோடியாக உயா்ந்துள்ளது என்று டிடிஏ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிடிஇஏ லக்குமிபாய் பள்ளியில் கணபதி ஹோமம்

தோ்வு முடியும் வரை மாணவா்களுக்கு மெட்ரோ நிலையங்களில் முன்னுரிமை

உன்னாவ் காவல் மரண வழக்கு-குற்றவாளி ஜெய்தீப் செங்கா் சரணடைய நீதிமன்றம் உத்தரவு

பொன்னியின் செல்வன் பாடல் சா்ச்சை - உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டாா் ஏ.ஆா்.ரஹ்மான்

பதவியில் ஒரு வருடத்தை நிறைவு செய்தது தில்லி பா.ஜ.க அரசு

SCROLL FOR NEXT