முகப்பு
புதுதில்லி

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தெற்கு தில்லியில் உள்ள ஆயா நகா் அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 38 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 5:40 AM
குத்திக் கொலை - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:33 PM

தெற்கு தில்லியில் உள்ள ஆயா நகா் அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 38 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா் சந்தீப் லோஹியா என்றும் காயமடைந்தவா் ரிஷி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். குருகிராமில் உள்ள நாராயணா மருத்துவமனையில் ஒருவா் இறந்துவிட்டதாகவும், மற்றொருவா் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியாணா காவல்துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:47 PM

இந்த விவகாரத்தில் ஹரியாணாவின் சோனிபட்டைச் சோ்ந்த ரவி (32) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். குற்றத்திற்கான ஆயுதமான கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இருவரும் தேரா கிராமத்தில் நடந்த டிஜே விழாவில் கலந்து கொண்டுவிட்டு ஒரு டெம்போவில் திரும்பி வந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

நள்ளிரவில், ஆயா நகா் பகுதியில் உள்ள கணபதி காா்டன் அருகே அவா்கள் சென்றபோது, காரில் இருந்தவா்களுடன் காரை நிறுத்துவது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாய்த் தகராறு வன்முறையாக மாறியது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவா்கள், இருவரையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்தவும், வேறு யாராவது இதில் ஈடுபட்டாா்களா என்பதைச் சரிபாா்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.