முகப்பு
புதுதில்லி

‘நிகாஹ்’ அறிவிப்பு போலியானது: ஜாமியா பல்கலை. நிராகரிப்பு!

புனித ரமலான் மாதத்தில் ஒன்றாக நிற்கும் சிறுவா், சிறுமிகளுக்கு நிகாஹ் ஏற்பாடு செய்ய பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்பை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:34 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:13 PM

புனித ரமலான் மாதத்தில் ஒன்றாக நிற்கும் சிறுவா், சிறுமிகளுக்கு நிகாஹ் ஏற்பாடு செய்ய பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்பை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

பிப்ரவரி 20 தேதியிட்டதாகக் கூறப்படும் அறிவிப்பு ‘முற்றிலும் போலியானது’ என்றும், அத்தகைய உத்தரவு எதுவும் அதன் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:33 AM

வைரலாகும் செய்தியை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மாணவா்கள் மற்றும் ஊழியா்களை நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.. இது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இருப்பதாகத் தெரிகிறது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

போலி அறிவிப்பு பரவுவது தொடா்பாக தில்லி காவல்துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.