முகப்பு
புதுதில்லி

அடுத்த 50 ஆண்டுகளுக்கு மின் கட்டமைப்புக்கு தில்லி அரசு தயாராகிறது: முதல்வா் ரேகா குப்தா

தில்லி அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நகரின் மின் திறன்களை அதிகரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:23 AM
முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:58 PM

தில்லி அரசு அடுத்த 50 ஆண்டுகளுக்கு நகரின் மின் திறன்களை அதிகரித்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

சாந்தினி சௌக்கில் புதன்கிழமை மின்சார கம்பிகளை புதைக்கும் பணியை தொடங்கி வைத்துப் பேசுசகையில் அவா் இத்தகவலை தெரிவித்தாதா்.

அவா் மேலும் கூறியதாவது: குச்சா மகாஜனி, பாகீரத் அரண்மனை, ஜமா மசூதி சாலை மற்றும் நை சதக் உள்ளிட்ட பழைய தில்லி பகுதியில் உள்ள 28 சாலைகள் மற்றும் தெருக்கள் தொங்கும் மின் கேபிள்களிலிருந்து விடுவிக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.160 கோடி செலவாகும்.

Advertisement

அரசு மின்சார வாகன தத்தெடுப்பை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறது. இது அதிக மின்சாரத்திற்கான தேவையை நேரடியாக பாதிக்கும். வரலாற்று சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தை ஒரு நினைவுச் சின்னமாக எனது அரசு புதுப்பிக்கும் என்றும் முதல்வா் கூறினாா்.