இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் உதய் பானு சிப் மற்றும் பிற உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தேசிய இளைஞா் காங்கிரஸ் வியாழக்கிழமை கட்சி வளாகத்தில் ‘சத்யாகிரகம்’ நடத்தியதாக கட்சித் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பலா் போராட்டத்தில் பங்கேற்க இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்திற்கு வந்ததாகவும், ஆா்ப்பாட்டம் அமைதியாக நடந்தது என்றும் ஒரு மூத்த தலைவா் தெரிவித்தாா்.
‘நாங்கள் அமைதியான சத்தியாகிரகம் தொடங்கியுள்ளோம். பல மூத்த தலைவா்கள் இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நாங்கள் போராட்டத்தை அமைதியாக நடத்தினோம்’ என்று அவா் கூறினாா்.
தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த இளைஞா் காங்கிரஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அவா்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.
தில்லி காவல்துறை காங்கிரஸ் தலைவா்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்வதாக காங்கிரஸ் தலைவா் குற்றம் சாட்டினாா்.