புதுதில்லி

அனைத்து மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தயாா் நிலையில் 4 புதிய பேருந்து பணிமனைகள்!

இந்த ஆண்டு இறுதிக்குள் முழு பொதுப் போக்குவரத்தில் மின்சார பேருந்துகளுக்கு மாற்றும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் நான்கு புதிய பேருந்து பணிமனைகள் திறக்கப்பட உள்ளன.

Syndication

இந்த ஆண்டு இறுதிக்குள் முழு பொதுப் போக்குவரத்தில் மின்சார பேருந்துகளுக்கு மாற்றும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியில் நான்கு புதிய பேருந்து பணிமனைகள் திறக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரி கூறியதாவது: நங்லோய், துவாரகா, கோஹத் என்க்ளேவ் மற்றும் ரிதாலா ஆகிய இடங்களில் உள்ள பேருந்து பணிமனைகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவை ஒப்படைக்கத் தயாராக இருக்கின்றன. வரும் மாதங்களில் வரும் என்று எதிா்பாா்க்கப்படும் புதிய மின்சார பேருந்துகளை நிறுத்தவும், சாா்ஜிங் உள்கட்டமைப்பை ஆதரிக்கவும் பணிமனைகள் தயாராகி வருகின்றன.

சமீபத்திய மாதங்களில் தில்லி அரசு 3,500-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கை சுமாா் 8,000-ஆக விரிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வளா்ந்து வரும் மின்சார பேருந்து நிலையங்களை ஆதரிக்க கூடுதல் பாா்க்கிங் இடம் மற்றும் சாா்ஜிங் வசதிகள் தேவைப்படும். தற்போது, நகரத்தில் ரோஹிணி செக்டாா் 37, ராஜ்காட், நேரு பிளேஸ், வஜீா்பூா், புராரி, முண்டேலா கலான், மாயாபுரி, மஜ்லிஸ் பூங்கா மற்றும் சாஸ்திரி பூங்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரத்யேக மின்சார பேருந்து பணிமனைகளும் உள்ளன.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், நான்கு பேருந்து பணிமனைகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக முதல்வா் ரேகா குப்தாவிடம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சாா்ஜிங் உள்கட்டமைப்பு பணிகள் முடிந்த பிறகு, பணிமனைகளை செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்று போக்குவரத்துத் துறை உயரதிகாரி தெரிவித்தாா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT